அறிவிப்பு: நவம்பர் 29-ல் ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு பதிவு

180

அறிவிப்பு: நவம்பர் 29-ல் ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு பதிவு – நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் நாளை 29-11-2017 (புதன்கிழமை) காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் வேட்புமனு பதிவு செய்கிறார்.

அவ்வயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வேட்புமனு பதிவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் பவர் ஹவுஸ் மேம்பாலம் அருகில் உள்ள தொகுதி அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்கும், இடைதேர்தல் பணிகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திமாவீரர் நாள் பொதுக்கூட்டம் 2017 – கிருஷ்ணகிரி | சீமான் வீரவணக்கவுரை [காணொளி – புகைப்படங்கள்]
அடுத்த செய்திசாதி-மத ஒடுக்குமுறையால் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை: குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல்