ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை: மறுமலர்ச்சி த.மு.மு.க நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்பு

168

அறிவிப்பு: ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை: மறுமலர்ச்சி த.மு.மு.க நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்பு – அரும்பாக்கம் | நாம் தமிழர் கட்சி

ரோகிங்கியா முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் மியான்மர் அரசைக் கண்டித்தும் ரோகிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் தரமறுத்து வெளியேற்ற துடிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் ஊடுருவும் பாசிசத்திற்கு எதிராகவும் மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் கண்டன பொதுக்கூட்டம் நாளை 06-10-2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை, அரும்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றுகிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சி உறவுகள் தவறாமல் பங்கேற்கவும்

நாள்: 06-10-2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி
இடம்: ஆவின் பால் நிலையம் அருகில், எம்.எம்.டி.ஏ காலனி, அரும்பாக்கம், சென்னை
தொடர்புக்கு: +91-9444135559 / 9962968686


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084