கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதி மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல் மற்றும் துயர்துடைப்பு உதவிகள்

65

செய்திக்குறிப்பு:  கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதி மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல் மற்றும் துயர்துடைப்பு உதவிகள்  |  நாம் தமிழர் கட்சி

கனமழையாலும், வெள்ளப்பெருக்கினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகர மக்களுக்கு துயர் துடைப்பு உதவிகள் வழங்குவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், இன்று 11-11-2021 காலை, வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சத்யா நகர், வள்ளியம்மை நகர் மற்றும் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனி ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி