அறிவிப்பு: வழக்கறிஞர்கள் நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான தொடர்முழக்கப் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

189

அறிவிப்பு: வழக்கறிஞர்கள் நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான தொடர்முழக்கப் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – நாம் தமிழர் கட்சி

மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும்,

மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்ற நீட் உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத் தேர்வுகளையும் ரத்துச் செய்ய வலியுறுத்தியும்,

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும்,

கல்வியில் தனியார் ஆதிக்கத்தை ஒழித்து அடிப்படை கல்வியிலிருந்து, ஆராய்ச்சிக் கல்விவரை அரசே வழங்கிடக் கோரியும்

தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் ஒருங்கிணைக்கும் தொடர் முழக்கப் போராட்டம் நாளை 13-09-2017 புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை சென்னை உயர்நீதிமன்றம் அருகில் நடைபெறவிருக்கிறது.

இதில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் பங்கேற்கின்றன. நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கண்டனவுரையாற்றுகிறார்.

அவ்வமயம் நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை வலிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 13-09-2017, புதன்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை
இடம்: சென்னை உயர்நீதிமன்றம், ஆவின் வாயில் அருகில்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஇம்மானுவேல் சேகரனார் 60வது நினைவுநாள் மலர்வணக்கம் – பரமக்குடி
அடுத்த செய்திவழக்கறிஞர்கள் நடத்திய நீட் தேர்வுக்கு எதிரான தொடர்முழக்கப் போராட்டத்தில் சீமான் கண்டனவுரை