அறிவிப்பு: கவிக்கோ அபுதுல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு – வடபழனி(02-08-2017)

1232

அறிவிப்பு: கவிக்கோ அபுதுல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு – வடபழனி(02-08-2017) | நாம் தமிழர் – கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை

நாம் தமிழர் – கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை நடத்தும் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு, நாளை 02-08-2017 புதன்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை, வடபழனியில் உள்ள ஆர்.கே.வி அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில், விடுதலைப் பாவலர் அறிவுமதி, எழுச்சிப் பாவலர் மறத்தமிழ்வேந்தன், செந்தமிழ்ப் பாவலர் பழனிபாரதி, இனமானக் கவிஞர் யுகபாரதி, நெருப்புக் கவிஞர் இளையகம்பன், இயக்குனர் ஜனநாதன், இயக்குனர் சேரன், இயக்குனர் அமீர், இயக்குனர் கரு.பழனியப்பன், இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் தபூ சங்கர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நினைவுரையாற்றுகிறார்கள்.

நமது பெரும்பாவலர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் காலத்தால் அழியாத நினைவுகளோடு கவிதை பொழியும் மாலையில் சந்திப்போம் வாருங்கள்.

கவிக்கோ அவர்களுக்கு பெருமிதத்தோடு நமது புகழ் வணக்கத்தைச் செலுத்த நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

நாள்: 02-08-2017 புதன்கிழமை மாலை 4 மணி

இடம்: ஆர்.கே.வி அரங்கம் (விஜயா மருத்துவமனை எதிரில்), வடபழனி, சென்னை

தொடர்புக்கு: 9092617178 / 9600709263


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-4380 4084