மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதக் கொள்கை முடிவுகளைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி
மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொடர்ச்சியான மக்கள் விரோதக் கொள்கை முடிவுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நாளை 16-06-2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் காரைக்கால் மண்டலத்திற்குட்பட்ட மதகடியில் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனவுரையாற்றுகிறார்.
அதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளீர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம்: அரசலாற்றுப் பாலம், மதகடி, காரைக்கால் மாவட்டம், பாண்டிச்சேரி
தொடர்புக்கு: +91-99650 94959 / +044-4380 4084