மே 18, இன எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம் – பாம்பன் | சீமான் எழுச்சியுரை

44

மே 18, இன எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம் – பாம்பன் | நாம் தமிழர் கட்சி | சீமான் எழுச்சியுரை

மே 18, தமிழினப் படுகொலை நாள்: சிங்களப் பயங்கரவாத அரசு, நம் தாய்நிலம் தமிழீழத்தைக் கொலைக்களமாக்கி நம் இனமக்களைக் கொன்றுகுவித்தது. அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் பிள்ளைகள் இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியைக் கேட்டு இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிற துயரம் தொடர்கிறது. ஆறாத காயங்களோடும், அழுத விழிகளோடும் வீட்டை இழந்து, நாட்டை இழந்து ஏதிலிகள் என்ற இழிபெயரோடு இடம்பெயர்ந்து தவிக்கும் இனத்தின் பிள்ளைகள் நாம். இந்தச் சாவு நம் இனத்தின் சாவு இல்லையா? இதை மறந்துபோனால் நாம் மானத்தமிழ்ப் பிள்ளையா? என்கிற கேள்வியோடும், விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! என்ற எழுச்சி முழக்கத்தோடும் இன எழுச்சி நாள் மாபெரும் பொதுக்கூட்டம் 18-05-2017 அன்று மாலை 5 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பன், புயல் காப்பகத் திடலில் பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் மத்தியில் அகவணக்கம் மற்றும் உறுதிமொழியுடன் தொடங்கியது. விண்ணைப் பிளக்கும் பறையிசை ஆட்டத்தைத் தொடர்ந்து, சிறுவன் கோத்தகிரி தமிழவன், இளந்தமிழன் சேக், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பூர் சுடலை, இடும்பாவனம் கார்த்திக், சாரதி ராஜா, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் மணி செந்தில், ஜெகதீசப் பாண்டியன், அறிவுச்செல்வன், கலியானசுந்தரம், மற்றும் புதுக்கோட்டை ஜெயசீலன், பேராவூரணி திலீபன், கோட்டைக்குமார், திருச்சி சீமான், ஹுமாயுன், புலவர் மறத்தமிழ்வேந்தன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் சீதாலட்சுமி, இலக்கியா, அமுதா நம்பி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் களஞ்சியம், அன்புத்தென்னரசன், மற்றும் வியனரசு உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். இறுதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன எழுச்சியுரையாற்றினார்.
தீர்மானங்கள் | மே-18, இன எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – பாம்பன் | வழக்கறிஞர் அறிவுச்செல்வன் | 2017
https://www.youtube.com/watch?v=clHWu-d84C8