கண்ணகி பெருவிழா – நிகழ்ச்சி நிரல் (7-5-2017 முதல் 10-5-2017 வரை ) | வீரத்தமிழர் முன்னணி

663

கண்ணகி பெருவிழா – நிகழ்ச்சி நிரல் (7-5-2017 முதல் 10-5-2017 வரை ) | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி
————————————————————–
மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளம் என்பதை முன்னிறுத்தி கண்ணகியின் பெரும்புகழைப் போற்றும் விதமாகவும், ‘பண்பாட்டு புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!’ என்ற தத்துவ முழக்கத்திற்கேற்பவும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னெடுக்கும் கண்ணகி பெருவிழா 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பூம்புகாரில் நடைபெறவுள்ள கடலாடுதல் விழாவில் நாகை (வ) மண்டல செயலாளர் சு.கலியபெருமாள் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன் மற்றும் களஞ்சியம் சிவக்குமார் ஆகியோரால் கண்ணகி பெருவிழா பெருஞ்சுடரேற்றி துவக்கிவைக்கப்படுகிறது அதனைத்தொடர்ந்து கண்ணகி கடலாடுதல் பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இறைநெறி இமையவன் பெருவிழா பேருரையாற்றுகிறார்.

மறுநாள் 08-05-2017 திங்கள்கிழமை காலை 6 மணிக்கு பூம்புகாரில் இருந்து கண்ணகி பெருவிழா பெருஞ்சுடரை ஏந்தி பெருவிழா பெரும்பயணம் தொடங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த ஐயா. கோவிந்தராசனார் ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆய்வுசெய்து, கண்ணகி பயணித்த வழித்தடத்தை ஆவணப்படுத்திய ஊர்களின் வழியே பெருவிழா பெருஞ்சுடரின் பயணம் இருக்கும்.

இப்பெரும்பயணம் கம்பத்தில் உள்ள கண்ணகி கோட்டைக்கு நமது பெரும்பாட்டி கண்ணகி சுடரேந்தி பயணித்த வழியே பூம்புகாரில் தொடங்கி மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், உரையூர்(திருச்சி), விராலிமலை, பிரான்மலை (மதிய உணவு), அழகர்மலை, மதுரை (இரவு தங்கல்) சென்றடைகிறது.

மறுநாள் 09-05-2017 காலை நாகமலை (புதுக்கோட்டை), செக்கானுரணி, கருமாத்தூர், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வைகை அணை, தேனி (மதிய உணவு), கம்பம் வழியாக பயணித்து இறுதியாக கூடலூர் (கம்பம்) சென்றடைகிறது. அங்கு மாலை 4 மணியளவில் கண்ணகி பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இறைநெறி இமையவன் ஆகியோர் பெருவிழா பேருரையாற்றுகின்றனர்.

மறுநாள் 10-05-2017 செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்ணகி கோயிலில் சீமான் தலைமையில் கண்ணகி வழிபாடு நடைபெறுகிறது.