இன்றே இணைவோம்: ‘துளி’ திட்டம் – துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

362

இனமான உறவுகளுக்கு வரலாற்றுப் பேரழைப்பு!

இன்றே இணைவோம்: ‘துளி’ திட்டம் – துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

http://www.naamtamilar.org/thuli/
===============================================================

உலகில் அடிமைப்பட்டு நிற்கிற இனமக்களெல்லாம் அவ்வடிமை நிலையில் இருந்து மீண்டுவருவதற்காகத் தங்கள் தலைவன் தலைமையில் அணிவகுத்து போராடுகிறார்கள். ஆனால், தமிழ்த்தேசிய இனமக்களோ தங்களது அடையாளத்தைத் தொலைத்து, தங்கள் தலைவன் யாரென்றே அறியாது தறிகெட்டு நிற்கிறார்கள். அதன்விளைவாக இந்நூற்றாண்டில் உலகின் மிகப்பெரும் இனப்படுகொலையை நம் தாயகமான தமிழீழ மண்ணில் நிகழக் கண்டோம். கண்முன்னே இனம் துள்ளத்துடிக்கப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டும் ஏதும் செய்யத் திராணியற்ற அடிமைகளாய் நின்றோம்.
உலகெங்கும் ஆண்டுக் களித்த இனமுன்னோரின் வழிவந்த நாம், இன்றைக்கு உலகெங்கும் அகதியாய் ஓடோடித் திரிகிறோம். கிரேக்கத்திற்கும், யவனத்திற்கும் முத்துக்களையும் அனுப்பி வைத்த பழந்தமிழர்களின் வாரிசுகள் இன்றைக்கு உலகெங்கும் கூலிகளாக அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம் பாட்டன் அரசேந்திரச்சோழனும், அவனது முன்னவர்களும் களம்செலுத்திய கடலிலே அடித்துதைத்து வீழ்த்தப்பட்டுச் சாகிறோம்.

எந்த மொழி சாகக்கூடாதென 800க்கும் மேற்பட்ட மொழிப்போர் ஈகியர்களை இழந்தோமே, அந்த உயிர் மொழியைச் சிதையக் கொடுத்து அந்நிய மொழிக்கு அடிமையாய் நிற்கிறோம். வந்தாரை வாழ வைத்த பெருங்குணம் மருவி ஆளவும் வைத்தன் விளைவாகச் சொந்த நிலத்திலே பொருளாதார அடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறோம். இப்படி உலகில் எந்த இனமும் சந்திராத அளவுக்குத் தாங்கொணாத் துன்பத்துயரங்களைச் சந்தித்து அழிவின் விளிம்பில் நிற்கிற நிலையில், அதனைக் கண்டு கிளர்ந்தெழுந்து எல்லாவற்றையும் மீட்கிற ஒரு பெருமுயற்சியாக ‘நாம் தமிழர்’ எனும் அரசியல் பெரும்பணியினை ஏழை எளிய பிள்ளைகள் தொடங்கினோம்.

‘அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் அடுத்த வேளைக்கு உணவு கிடைக்கும்’ எனும் கீழான பொருளாதார நிலையில் இருக்கிற, இனமானத்தைக் காக்க தங்களது வருமானத்தை இழந்த மானத்தமிழ்ப் பிள்ளைகள், தேர்தல் களத்திலே நின்று, ஐம்பதாண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தைச் சுவைத்து நிற்கிற, அதிகாரப்பலமும், பொருளாதாரப்பலமும், ஊடகப்பலமும் கொண்ட பணமுதலைகளை, ‘இழப்பதற்கு இனியேதுவுமில்லை’ எனும் நிலையில் எதிர்கொண்டு 1.1 விழுக்காடு வாக்கினைப் பெற்றிருக்கிறோம். அதுமட்டுமல்லாது இந்நிலத்தில் நிகழ்கிற அரசியலின் போக்கையே திசைமாற்றி, இளையோர் கூட்டம் நிகழ்த்திய ‘தைப்புரட்சிக்கு’ அச்சாரமிட்டோம்.

இத்தகைய வழியில், தமிழர்களின் அடிமைத்தளை அறுக்க, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கிடைக்கப்பெறாத அரசியல் விடுதலையை அடையும் முன்முனைப்போடு அதிகாரப்பசி கொண்டு திரியும் நாம் தமிழர் கட்சிக்குப் பெரும் தடையாகவும், தவிர்க்க இயலா இடையூறாகவும், அடுத்தக் கட்ட நகர்வையே முடக்கிபோடும் முதன்மைக் காரணியாகவும் எப்போதும் இருப்பது பொருளாதாரப் பலம் ஒன்றுதான்! தன்னிகரில்லா தத்துவத்தையும், சமரசமற்ற கொள்கையையும், அளவற்ற மக்கள் நலனையும், மண்ணை மாற்ற மகத்தானத் திட்டங்களையும், முன்னோர்கள் முன்வைத்த தூய அரசியலையும், கண்ணியமான போராட்ட வடிவங்களையும், பரந்த தொலைநோக்கையும் நிரம்பப்பெற்ற நாம் பொருளாதாரமின்மை எனும் ஒன்றால் மொத்தமாய் முடங்கிப்போயிருக்கிறோம். ‘நாம் தமிழர் கட்சி அதற்கெல்லாம் போராட மாட்டார்களா?‘ என எப்போதும் நம்மை நோக்கி விரல்களும், வினாக்களும் நீளுகின்றபோதெல்லாம் போராட்டங்களை முன்னெடுக்க நிதிக்காக நாம் போராடுவதையும், அதற்காய் அல்லாடுவதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. சில நேரங்களில் நம் முன்னோர்களின் நினைவு நாளுக்குச் சுவரொட்டி அடிப்பதற்கும், தலைமை அலுவலகத்தில் உணவு சமைப்பதற்கும், வெளியூர் கூட்டங்களுக்குச் பயணச்செலவுகளுக்குமே நிதியில்லாது நிலைகுலைந்து போய் நிற்கிறோம். எதுவொன்றாலும் நம்மை வெல்ல முடியாத நமது எதிரிகள், நமது பொருளாதாரமின்மையை மூலதனமாகக் கொண்டு நம்மை எளிதாக வென்றுவிடுகிறார்கள். நமது கட்சியின் முழுமுதற் சிக்கலாக இருக்கிற இப்பொருளாதாரத்தேவையை நாம் ஈடுகட்டிவிட்டால் நாம் அடையும் அபரிமிதமான வளர்ச்சியினை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே வெளிப்படை.
ஆகையினால், ‘விடுதலை என்பது தேசியக்கடமை! இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய நெருக்கடியால் பிறக்கும் துன்பத்தைச் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது துரோகமாகும். அந்நெருக்கடியினை முழுத் தேசிய இனமே பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்ற நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கிணங்க, நம் கட்சி எதிர்கொண்டிருக்கும் இப்பொருளாதார நெருக்கடியினையும், நிதிச்சுமையையும் பகிர்ந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு இனமானத்தமிழரின் தலையாயக் கடமையாகும். தாங்கள் அளிக்கும் சிறு நிதியுதவி நாம் தமிழர் கட்சியின் பெரும் வளர்ச்சிக்கு ஆதாரமாய் விளங்கும். இதனை உணர்ந்து, இவ்வியக்கத்தை வளர்த்து வார்த்தெடுக்க நிதியுதவி அளித்திடக் கோருகிறோம்.

அதற்கான ஒரு முன்னெடுப்பாக ‘துளி’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டே தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை விரிவுபடுத்தப்படாததன் விளைவாக இன்றைக்குப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறோம். இத்திட்டம் மட்டும் சரிவரச் செயற்படுத்தப்பட்டால் நாம் இன்றைக்கு அடைந்திருக்கிற வளர்ச்சியைக் காட்டிலும் 10 மடங்கு வளர்ச்சியை மிக எளிதாக எட்ட இயலும் என்பது மறுக்கவியலா உண்மை. அத்தகைய வளர்ச்சியை எட்ட ஒரு முன்னெடுப்புதான் இந்த ‘துளி’ திட்டம்; 1,000 நபர்களிடமிருந்து 1,000 ரூபாயை மாதந்தோறும் திரட்டுவதுதான் இதன் வேலைத்திட்டம். இத்திட்டத்தினைச் செயலாக்கம் செய்வதன்மூலம் நம் கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் பொருளாதார நெருக்கடியினை நம்மால் முழுமையாக அகற்றிவிட முடியும்.

இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியைக் கொண்டு, கட்சியின் நிர்வாகச் செலவுகள், தலைமை அலுவலக ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியச் செலவுகள், அன்றாடம் நடந்தேறும் கட்சி நிகழ்வுகளுக்கான செலவுகள், தலைமையால் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களுக்கான செலவுகள், பயணத்திட்டச் செலவுகள் என எல்லாச் செலவினங்களையும் நம்மால் சமாளித்து, கட்சிப்பணிகளை இன்னும் வீரியமாகத் துரிதப்படுத்த முடியும். இதனையுணர்ந்து இன விடுதலைக்களத்தில் அயராது நிற்கும் நாம் தமிழர் கட்சியைப் பேராற்றல் மிக்க அரசியல் பெரும்சக்தியாக மாற்ற இன்றே ‘துளி’ திட்டத்தில் இணையுங்கள்.
உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் இதுகுறித்துப் பேசுங்கள். இதற்கான இன்றியமையாத் தேவையை உணரச் செய்து, இத்திட்டத்தில் இணையச் செய்யுங்கள்.

இந்த வருமானம் காக்கும் நம் இனமானம்!

‘துளி’ திட்டத்தில் இணையக் கீழுள்ள இணைப்பில் சென்று படிவத்தில் உங்கள் விவரங்களைத் தந்து இணைந்து கொள்ளவும்.

http://www.naamtamilar.org/thuli/

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!