தமிழ் மீனவர் சுட்டுக்கொலை: இராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்கிறார் சீமான்

317
naam-thamizhar-katchi-logo
naam-thamizhar-katchi-logo

தமிழ் மீனவர் சுட்டுக்கொலை: இராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்கிறார் சீமான்
===================================================
இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பிரிட்சோ, கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து, தமிழக மீனவரைச் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவர் பிரிட்சோவின் உடலை வாங்க மறுத்து, தங்கச்சிமடத்தில் அப்பகுதி மீனவர்கள் கடந்த 4 நாட்களாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாளை (10-03-2017) காலை 11 மணிக்கு நேரில் சென்று அப்போராட்டத்திற்கு ஆதரவளித்து, கொலையுண்ட மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கிறார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி