மறைந்த ‘கலைமாமணி’ மணவை முஸ்தபாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தார் சீமான்

27

மறைந்த ‘கலைமாமணி’ மணவை முஸ்தபாவின் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார் சீமான்
—————————–
தமிழுக்குத் தொண்டாற்றிய ‘கலைமாமணி’ மணவை முஸ்தபா அவர்கள் இன்று 06-02-2017 காலை இயற்கை எய்தினார். நாளை 07-02-2017 காலை 12 மணிக்கு அவரது உடல் சென்னையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார்.

மணவை முஸ்தபா அவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக அயராது உழைத்து 8 லட்சம் அறிவியல் தமிழ் கலைச் சொற்களை உருவாக்கியுள்ளார். இவரது அனைத்து நூல்களும் தமிழ்நாட்டு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு அரும்சேவை செய்த ஐயாவுக்கு நாம் தமிழர் கட்சி தனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது.