விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்

18

11-01-2017 விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் | நாம் தமிழர் கட்சி
——————————————————

உழவு இல்லையேல்! உணவு இல்லை!
உணவு இல்லையேல்! உலகு இல்லை!

உலகிற்கே உணவு படைக்கும் உழவர் கூட்டம் இன்று பயிர் வாடியதால் உயிர் வாடிச் சாகும் துயரநிலை தொடர்கிறது. இதைத் தடுக்கத் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து வேளாண் பெருங்குடிமக்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகுந்த இளைஞர் பாசறை நடத்துகிற மாபெரும் ஆர்ப்பாட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 11-01-2017 புதன்கிழமை, மாலை 2 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ளது.

உணவு உண்ணும் ஒவ்வொரு தமிழனும் ஒன்றாகக் கூடுவோம்!

உழவைக் காப்போம்!
உலகைக் காப்போம்!

நாம் தமிழர்!


10-01-2017
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

குறிப்பு: ஆர்ப்பாட்ட நேரம் காலை 11 மணி என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மாலை 2 மணி என மாற்றப்பட்டுள்ளது.