புயலினால் பாதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாமுக்கு உதவுங்கள்

46

‘வர்தா’ புயலினால் பாதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாமைப் பார்வையிட்ட நாம் தமிழர் உறவுகள் மக்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர்.அன்பின் உறவுகளுக்கு!
வணக்கம்.
வர்தா புயல் பாதிப்பினால் சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்புகளிலிருந்து நாம் மெல்ல மெல்ல மீண்டு வந்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதிலிருந்து மீளவே முடியாத அளவுக்கு அளப்பெரும் இன்னல்களுக்கு ஆளாகி நிற்கிறார்கள் கும்மிடிப்பூண்டி முகாமிலுள்ள நம் ஈழ உறவுகள். அவர்களது உடைமைகளும், பொருட்களும் புயலினால் பெருமளவு சேதமடைந்ததால் அன்றாட உணவுத்தேவைக்கு அல்லாடுகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது முகாமிலுள்ள குழந்தைகள்தான். பாலுக்குக்கூட வழியில்லாது அவர்கள் படும் துயரத்தை வார்த்தைகளால் வடிக்க இயலாது.
வந்தவர்களையெல்லாம் வாழவும், ஆளவும் வைத்து அழகு பார்த்த நாம், நம் சொந்த இனத்தவரை அகதிகள் முகாமிலே நிறுத்தி வைத்திருப்பதுதான் வரலாற்றுப் பெருங்கொடுமை. ஆதலால், தாய்த்தமிழகத்தை நம்பி வந்த நம் ஈழ உறவுகளுக்கு உதவிசெய்து அவர்களுக்கு உற்றதுணையாக நிற்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய தலையாயக் கடமை. அதனையுணர்ந்து, நம் உறவுகளுக்கு நம்மால் முடிந்த நிதியுதவி அளித்து அவர்கள் மீண்டுவர உதவுங்கள். அரிசி, பருப்பு, பால் பவுடர், ரொட்டி (பிஸ்கட்), கொசுவர்த்தி உள்ளிட்டப் பொருட்களாகும் உதவி வழங்கலாம். உதவ நினைக்கும் உறவுகள் 9600709263 எண்ணுக்குத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்கொடை அனுப்ப வேண்டிய வங்கி எண்:
Engal Thesam,
Indian Bank,
A/C No: 6325605143,
Branch: Mappedu
IFSC Code: IDIB000M119
Swift no: IDIBINBBMAS