18-11-2016 நாம் தமிழர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாசரேத் (தூத்துக்குடி)
========================
வருகின்ற 18.11.2016 வெள்ளிக்கிழமை, அன்று மாலை 6 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகரப் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகின்றார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகளும் மற்றும் அனைத்து பாசறைகளைச் சார்ந்த அனைத்து பொறுப்பாளர்களும் உணர்வெழுச்சியோடு கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு: 75 983 22136, 98 659 61467, 90 959 28655
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி