விக்னேசு நினைவேந்தல் பொதுக்கூட்டம் தொடர்பான முதன்மை நிர்வாகிகளின் கலந்தாய்வுக்கூட்டம்

11

‘காவிரிச்செல்வன்’ விக்னேசு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பான முதன்மை நிர்வாகிகளின் கலந்தாய்வுக்கூட்டம் | மன்னார்குடி 02-12-2016
=======================================

‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் மற்றும் ‘காவிரிச்செல்வன்’ விக்னேசு நினைவேந்தல் பொதுக்கூட்டம் வரும் 15-12-2016 (வியாழக்கிழமை) அன்று மன்னார்குடியில் நடைபெறவிருக்கிறது. அக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்துவது தொடர்பான முதன்மை நிர்வாகிகளின் கலந்தாய்வுக்கூட்டம் வரும் 02-12-2016 (வெள்ளிக்கிழமை) அன்று மன்னார்குடி, சாய் கிருட்டிணா திருமண அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. அதுசமயம், மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளும், மாணவர் பாசறை பொறுப்பாளர்களும் பங்கேற்க வேண்டுமாயின் கேட்டுக்கொள்கிறோம்

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி