காவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு!

56

காவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு!

பன்னெடுங்காலமாக அதிகாரமற்று நிற்பதன் விளைவாக நம்மினம் வஞ்சிக்கப்படும்போதும், நமது பாரம்பரிய உரிமைகளை இழக்கும்போதும் எதிர்ப்புணர்வையும், போராட்டக் குணத்தையும் வெளிக்காட்ட தங்கள் உயிரையே அநீதிக்கு எதிரான போரில் பலிகொடுக்க வேண்டிய துயர நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அது ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் தொடங்கி ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த காவிரி நதிநீர் மீட்புப்பேரணியில் தன் உடலுக்குத் தீ மூட்டி, தமிழர்கள் நெஞ்சிலே உணர்ச்சித்தீயைப் பற்ற வைத்தான் தம்பி விக்னேசு . ‘தன் சாவின் மூலம் இந்தப் போராட்டம் ஒருபடி முன்செல்லுமானால் அந்தச் சாவைத் தழுவிக்கொள்ள எம் மாவீரர்கள் போட்டியிடுவார்கள்’ என்ற தேசிய தலைவரின் கூற்றைக் கூர்ந்து நோக்கியவன் என்பதால், அதன்படியே வாழ்ந்து சென்றுவிட்டான்.

தம்பி விக்னேஷ் மிகவும் பின்தங்கிய குடும்பப் பின்னணியைக் கொண்டவன். கல்விக்கூடக் கடன் வாங்கிப் படித்தவன். அவன் நினைத்திருந்தால் படித்த படிப்புக்கும், பார்த்துக் கொண்டிருந்த வேலைக்கும் பொருளீட்டுவதிலே வாழ்க்கையைச் செலுத்தி மகிழ்ச்சிகரமாக வாழ்ந்திருக்க முடியும். எல்லோரையும் போல அவனுக்குள்ளும் அவனது எதிர்காலம் குறித்த ஒரு கனவு, சுய வாழ்க்கையைப் பற்றிய ஒரு அவா இருந்திருக்கும். அவை எல்லாவற்றையும் துச்சமெனக் கருதித் தூக்கித்தூர எறிந்துவிட்டு இன நலனை விரும்பியே உயிரைத் துறந்திருக்கிறான்; தன்னையே இழக்கும் அவனது போராட்ட வழிமுறையை வேண்டுமானால் பிழையென்று குறைகூறலாம்; ஆனால், அவனது தியாகம் மிக உயர்ந்தது; ஈழ மண்ணிலே வீரவிதைகளாக விதைக்கப்பட்டிருக்கிற மாவீரர்களின் ஈகத்தை ஒத்தது. அப்பேர்பட்ட மகனைப் கொடுத்த அவனது பெற்றோர்களை விக்னேஷின் இடத்திலிருந்து பார்த்துக்கொண்டு, அவனது கனவுகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு இனமானத்தமிழனின் பெருங்கடமை.

வரும் திசம்பர் 15 அன்று நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக நடைபெறும் ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவு நாளிலில் , ‘காவிரிச்செல்வன்’ விக்னேசு நினைவேந்தல் நிகழ்வும் நடைபெறவிருக்கின்றது. பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்று பின்தங்கி இருக்கிற தம்பியின் குடும்பத்தை நமது குடும்பமாக ஏற்று நம் பெற்றோர்களுக்கு உதவ முன்வருவோம்! தம்பி விக்னேஷ் விட்டுச்சென்ற அவனது கடமைகளை நிறைவேற்றுவோம்!

வங்கி விவரம்:-

Account Name: Naam Tamilar Katchi

Bank Name: Axis Bank

Account Number: 916020049623804

IFSC code: UTIB0002909

MICR Code: 600211076

SWIFT Code: CHASUS33

Branch: No. 442, Poonamallee High Road, Maduravoyal, Chennai-600095

Paypal விவரம்:-

https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=RN56MAR4XLERC

முந்தைய செய்திஈழம் எங்கள் இனத்தின் தேசம் – கருத்தரங்கம் (சென்னை) | சீமான் கருத்துரை
அடுத்த செய்திதேசியத்தலைவர் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பு – பொதுக்கூட்டங்கள் ரத்து