காவிரி நதிநீர் உரிமைக்காகத் தீக்குளித்து உயிர்நீத்த விக்னேசின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக நாம் தமிழர் தலைமை அலுவகத்தில் வைக்கப்படுகிறது

282

காவிரி நதிநீர் உரிமைக்காகத் தீக்குளித்து உயிர்நீத்த விக்னேசின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக நாம் தமிழர் தலைமை அலுவகத்தில் வைக்கப்படுகிறது

கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து சென்னை எழும்பூரில் நேற்று (15-09-2016) மாலை 3 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியில் தீக்குளித்த தம்பி பா.விக்னேசு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அனைத்து கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன் உயிர் ஈந்த ஈக மறவன் காவிரிச்செல்வன் தம்பி பா. விக்னேஷ் அவர்களின் உடல் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவகத்தில் இன்று (16-09-2016) மாலை 6 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் இன்றிரவு அவரது உடல் தம்பியின் சொந்தஊரான மன்னார்குடிக்கு எடுத்து செல்லப்பட்டு நாளை (17-09-2016) காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அவரது வீட்டின் முகவரி:

பா. விக்னேசு,
த/பெ பாண்டியன்
கோபால சமுத்திரம் மேலவீதி,
மன்னார் குடி,
திருவாரூர் 614001

இதற்காக தம்பியின் உடலை எடுத்துச்செல்ல காவல்துறையின் அனுமதி கிடைத்துவிட்டதால் அனைவரும் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவகத்தில் அஞ்சலி செலுத்தக் கூடுவோம்!