ஓ.சி.எப் நிர்வாகத்தை கண்டித்து ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் 19-08-2016

7

naam-tamilar-protest-against-ocf

தமிழர்களின் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பு உரிமையை பறிப்பதையும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையும், தமிழ் உணர்வாளரும், தையல் தொழிலாளருமான துளசிராம் அவர்களின் பணியிடை நீக்கத்தை எதிர்த்தும், ஓ.சி.எப் நிர்வாகத்தை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-08-2016 அன்று காலை 11 மணியளவில் ஆவடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வியனரசு மற்றும் அன்புதென்னரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட தையல் தொழிலாளர் துளசிராம் பங்கேற்றார். மேலும் ஆவடி-அம்பத்தூர் பகுதி பொறுப்பாளர்கள், மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் அப்பகுதி நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
naam-tamilar-protest-against-ocf
naam-tamilar-protest-against-ocf
naam-tamilar-protest-against-ocf