ஹரித்துவாரில் வள்ளுவப்பெருந்தகையின் சிலை அவமதிப்பைக் கண்டித்தும்,
காஷ்மீரில் நடக்கும் மனிதப்பேரவலத்தைக் கண்டித்தும்,
சமூகச்செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும்,
கல்விக்கடனை அடைக்க இயலாதநிலையில், கடனை செலுத்துமாறு கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் லெனினின் மரணத்திற்கு காரணமானவர்களைத் தண்டிக்கக்கோரியும்,
பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயர்த்திகட்டும் ஆந்திர அரசின் செயலைக் கண்டித்தும்
நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (24-07-16) காலை 10 மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கண்டன உரையாற்ற்றினார். மேலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசன், ஆட்சிமொழிப் பாசறை மறத்தமிழ்வேந்தன், ஆன்றோர் அவை பொறுப்பாளர் சோழ நம்பியார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீச பாண்டியன், வழக்கறிஞர் அறிவுசெல்வன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பொன்.கவுசல்யா, மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருண்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.