திருப்பூர் (வ) மண்டல செயலாளர் சு.ப. சிவக்குமார் மறைவிற்கு சீமான் இரங்கல்

31

திருப்பூர் (வடக்கு) மண்டல செயலாளர் சு.ப. சிவக்குமார் அவர்களின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
13510721_1084067305014361_1956258343_n
என் அன்பு உறவுகளே!
ஒரு துயரச்செய்தியை உங்களிடத்தில் பகிர்கிறேன். திருப்பூர் மண்டலச் செயலாளராக நம்மோடு பணியாற்றி வந்த நமது அன்பிற்கினிய தம்பி சுப. சிவக்குமார் அவர்கள் சாலை விபத்தில் சிக்குண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காது நம்மைவிட்டு பிரிந்து விட்டார்.

அந்த மீளாத்துயரில் துடித்துக் கொண்டிருக்கிற வேளையில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாரின் துயரத்தில் நாம் அனைவரும் பங்கேற்போம்.

நம்மோடு பணியாற்றிய நம் உடன்பிறந்தவனுக்கு நம் ஆழ்ந்த இரங்கலை செலுத்துவோம்.

உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

உயிர் மிகவும் உன்னதமானது. சாலையில் பயணிக்கிறபோது தலைக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்.

செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.
நாள்: 20-06-2016