ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் தடுக்க காவல்துறையினரால் சீமான் கைது செய்யப்பட்டார்

70

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் மதுரையில் கைது செய்யப்பட்டார்.

மதுரை பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதற்காக அவர் மதுரையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்ததாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், கபல்தீபன், புவனகரி வேட்ப்பாளர் ரத்தினவேல் உள்ளிட்ட 20 பேரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் பூதக்குடி அருகே ஜல்லிக்கட்டை நடத்தச் சென்ற சீமான் உள்ளிட்ட 500கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று சீமான் குற்றச்சாட்டினார்.

முந்தைய செய்திபொங்கட்டும் தமிழர் உள்ளங்களில் புரட்சிப் பொங்கல் – செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திபவானிசாகர் சட்டமன்றத் தொகு‌தி சத்தியமங்கலம் கொடியேற்றம் மற்றும் பொங்கல் விழா