இராஜா அம்மையப்பன் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்

316

இனிய அறிவிப்பு
நாள்: 30/12/2015

பண்டைத்தமிழ் மூதாதை மானமறவன் இராவணப் பெருந்தகையின் காவியத்தையும், நமது முப்பாட்டன் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதிய பெரும்புலவர் குழந்தை அவர்களின் பேரனும் ஆற்றலும், செயல்திறனுமிக்க இராஜா அம்மையப்பன் அவர்களை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கிறேன். அவருக்கு நாம் தமிழர் பிள்ளைகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து களப்பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

புரட்சி வாழ்த்துகளுடன்

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

raja-amaiyappan-appointment-naam-tamilar-katchi