காமன்வெல்த் கூட்டமைப்பு என்றால் என்ன?

2317

ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ராசபக்சேவை பன்னாட்டு விசாரணையிலிருந்தும், நெருக்கடிகளிலிருந்தும் தப்பிக்கச் செய்ய காமன்வெல்த் மாநாட்டில் ராசபக்சேவுக்கு மகுடம் சூட்ட அணியமாகிறது இந்திய அரசு.

காமன்வெல்த் கூட்டமைப்பு என்றால் என்ன?

* பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் அடிமையாயிருந்த நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு 1949இல் உருவாக்கப்பட்டது காமன்வெல்த் எனப்படும் பொதுநலவாய் கூட்டமைப்பு.

* காமன்வெல்த் கூட்டமைப்பில் இந்தியா உள்ளிட்ட 54 நாடுகள் தற்போது உறுப்பு நாடாய் உள்ளன.

* காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவதொரு உறுப்பு நாட்டில் நடைபெறும்.

* இதில் உறுப்பு நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும்; அவைகள் தங்களுக்குள் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளும்; இதன்மூலம் மாநாட்டை நடத்தும் நாட்டிற்கு கோடிக்கணக்கான முதலீடுகள் குவியும்.

* மேலும், இந்த மாநாடு எந்த உறுப்பு நாட்டில் நடைபெறுகிறதோ, அந்த நாட்டு அரசின் தலைவர்தான் அடுத்த 2 ஆண்டுகளுக்கு காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக இருப்பார். இது காமன்வெல்த் மரபு.

* இதன்படி கடந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டு, காமன்வெல்த் கூட்டமைப்பின் 23வது உச்சி மாநாடு, வரும் நவம்பர் 10 முதல் 17 வரை இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ளது.

* அப்‌படி காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அடுத்த 2ஆண்டுகளுக்கு ராசபக்சேதான் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவர்.

* காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக ராசபக்சே ஆகிவிட்டால், இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளுக்கும் ராசபக்சேதான் தலைவர்.

* அதன்பிறகு, ராசபக்சே மீது இனப்படுகொலை குறித்த விசாரணையோ, தண்டனையோ அறவே சாத்தியமில்லை. ஆதலால், நம் உறவுகள் ஒன்றரை இலட்சம்பேரை கொன்றொழித்த அரக்கன் ராசபக்சே எளிதில் தப்பித்துவிடுவான்.

* இலங்கைக்கு இப்‌படிப்பட்ட வாய்ப்பை வழங்க ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலுள்ள 8 கோடித் தமிழர்களின் உணர்வை கொஞ்சம்கூட மதியாது, தமிழர்களுக்கு மிகப்பெரும் அநீதியையும், துரோகத்தையும் இழைத்திருக்கிறது இந்திய பேரரசு.

* கடந்த காமன்வெல்த் மாநாட்டில் இலங்கையில் மாநாடு நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, கனடா அதிபர் ஸ்டீபன் ஹார்பரும், ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியஸ் கில்லார்ட் அம்மையாரும் கடும்கண்டனத்தை பதிவு செய்கிறார்கள். மேலும், ராசபக்சே பேச எழுந்தபோது, “இரத்த வாடை வீசும் இந்த மனிதனின் பேச்சை எங்களால் கேட்க முடியாது” எனக்கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறார் கனடா அதிபர் ஸ்டீபன் ஹார்பர். அத்தோடு, இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால், அதில் கனடா பங்கேற்காது எனவும் அறிவிக்கிறார். ஆனால், 8 கோடித் தமிழர்கள் தாஙகள் தாய்நாடென கருதி வாழும் இந்தியாவோ, அதற்கு நேர்மாறாக இலங்கையில் காமன்வெல்த் மாநாடு  நடத்தப்படவேண்டுமென முன்மொழிகிறது.

காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவேண்டிய காரணங்கள்:

*2013ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று, பிரித்தானிய அரசி எலிசபெத்தின் கையொப்பமிடப்பட்டு, காமன்வெல்த் அமைப்பின் கொள்கைப்பட்டயம் ஒன்று நடைமுறைக்கு வந்தது.

* இந்த பட்டயம் உறுப்பு நாடுகளில் நடைபெறும் சனநாயகம், மனித உரிமை, அதிகாரப்பரவல், சட்டத்தின் ஆட்சி, கருத்துரிமை ஆகியவற்றை கட்டாயமாக்குகிறது.

* ஆனால், இலங்கை அரசனாது, தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்திருக்கிறது; கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களை இடித்து, புத்த விகாரை நிறுவியிருக்கிறது; தமிழர் பகுதிகளில் சிங்கள குடியிருப்புகளை நிறுவி இருக்கிறது; தமிழர்களை நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்துகிறது;

தமிழர் பகுதிகளை இராணுவ மயமாக்கியிருக்கிறது; எனவே, காமன்வெல்த் கூட்டமைப்பின் அனைத்து விதிகளையும் மீறி கூட்டமைப்பில் இருக்கவே தகுதியற்றதாகிறது இலங்கை.

* இப்பட்டயம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவேகூட, கூட்டமைப்பிலிருந்து நாடுகள் நீக்கப்பட்டிருக்கிறது. 1960ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வெள்ளை நிறக்கொள்கையை பின்பற்றியதற்காக கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.

* 1977ஆம் ஆண்டு உகாண்டாவில் அந்நாட்டு அதிபர் இடியமீன் சர்வாதிகார ஆட்சி செய்தபோது உகாண்டா கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.

* 1995ஆம் ஆண்டு நைசீரியாவில் ஷெல் எண்ணெய் நிறுவததுக்கு எதிராக போராடியதற்காக கென்-சாரோ-வைவா என்ற பத்திரிக்கையாளர் அந்நாட்டு அரசால் தூக்கிலிடப்பட்டார்; ஆதலால், நைசீரியா கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.

* மக்களாட்சிக்கு எதிராக இராணுவ ஆட்சி நடத்தியதற்காக பாகிஸ்தான், பிஜி ஆகிய நாடுகளும் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

* இதனைப் போலவே, இலங்கையையும் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது, மனித உரிமை ஆர்வலர்களும் குரல் கொடுத்துவரும் வேளையில், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கவே தகுதியற்ற இலங்கையில் எப்‌படியாவது காமன்வெல்த் மாநாட்டை நடத்தி ராசபக்சேவை காப்பாற்றத் துடிக்கிறது இந்தியா.

* ஆதலால், இத்தருணத்தில் இலங்கையை காமன்வெல்த்திலிருந்து நீக்க, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடக்காது தடுக்க இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தலையாய கடமையாகிறது. எனவே,

மாணவர்களே! இளைஞர்களே!! மனிதநேயம்மிக்க மாந்தர்களே!!!

வாருங்கள்! பெரும்படையாய் அணிதிரள்வோம். காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கக் கோரி, பொதுமக்களிடம் பரப்புரைகளை மேற்கொள்வோம்! மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம்! இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்போம்! உயிரை விலையாக கொடுத்தேனும் இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை தீர்மானங்கள், முடிவுகள்.
அடுத்த செய்தி“மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம்