நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அழைப்பு.

77

வருகின்ற 18.12.2010 சனிக்கிழமை காலை 9 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில்நடைபெறவுள்ளது.எனவே சென்னை(3),திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம்,கடலூர்,திருவண்ணாமலை ,புதுச்சேரி,காரைக்கால்,ஆகிய மாவட்டத்தை சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

காலை : நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதியம் ; மாவட்ட வாரியாக சந்திப்புகள் நடைபெறும்

வருகின்ற 19.12.2010 ஞாயிறு அன்று செந்தமிழன் சீமான் அவர்களுடன் சந்திப்புகள் நடைபெறும்.

அன்பான வேண்டுகோள் ; நாம் தமிழர் கட்சியினர் செந்தமிழன் சீமான் அவர்களை இல்லத்தில்  சென்று சந்திப்பதை தவிர்த்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிறு அன்று மட்டும் சந்திக்க வேண்டப்படுகிறார்கள்.