முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன், தமிழ்த்தேசியப் பேரொளி அண்ணன் தமிழரசன், அன்புத்தங்கை அனிதா மூவர் நினைவேந்தல் கூட்டம்

5

க.எண்: 2026080248
நாள்: 31.08.2026

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன், தமிழ்த்தேசியப் பேரொளி அண்ணன் தமிழரசன், அன்புத்தங்கை அனிதா ஆகியோரின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மூவர் நினைவைப் போற்றும் கூட்டம் நாளை ஆவணி 15ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (01-09-2026) காலை 10 மணி முதல் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை -திருமோகூர் சாலையில் உள்ள A.P.வளையாபதி திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன்,
தமிழ்த்தேசியப் பேரொளி அண்ணன் தமிழரசன், அன்புத்தங்கை அனிதா மூவர் நினைவேந்தல் கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்: ஆவணி 15 செவ்வாய்க்கிழமை | 01-09-2026 காலை 10 மணி முதல்
இடம்: மதுரை கிழக்கு
A.P.வளையாபதி திருமண மண்டபம் ஒத்தக்கடை -திருமோகூர் சாலை
இந்நிகழ்வில், கட்சி மற்றும் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன், தமிழ்த்தேசியப் பேரொளி அண்ணன் தமிழரசன், அன்புத்தங்கை அனிதா ஆகியோரின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகள் சார்பாக, நாளை (01-09- 2026) ஆவணி 15ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று, மூவர் நினைவைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு முன்னெடுக்கப்படவேண்டும்