முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – வருசநாடு பகுதி பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும் மலை கிராம மக்களின் உரிமைக்கான மாபெரும் கவன ஈர்ப்புப் பொதுக்கூட்டம்

1

க.எண்: 2026080238
நாள்: 12.08.2026

அறிவிப்பு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்துக்குட்பட்ட மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பல தலைமுறையாக வசித்து வரும் 5000க்கும் அதிகமான மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முடிவை தவெக அரசு கைவிடக்கோரியும், அம்மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும் மாபெரும் கவன ஈர்ப்புப் பொதுக்கூட்டம் ஆடி 31ஆம் நாள் (16-08-2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணியளவில் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் நடைபெறவிருக்கிறது.
மேகமலை

வருசநாடு பகுதி பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும்
மலை கிராம மக்களின் உரிமைக்கான மாபெரும் கவன ஈர்ப்புப் பொதுக்கூட்டம்
கண்டனவுரை:
கல்வியாளர் மு.இ.ஹீமாயூன் கபீர், மாநில ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரை முருகன், மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்
நாள்: ஆடி 31 ஞாயிற்றுக்கிழமை | 16-08-2026 மாலை 04 மணிக்கு இடம்: தேனி-கடமலைக்குண்டு (விநாயகர் கோயில் அருகில்)
இப்பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தேனி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை