முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பாண்டிச்சேரி மாநில வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவிக்கவிருக்கிறார்.

13

க.எண்: 2026030105
நாள்: 03.03.2026

தமிழநாடே திரும்பி பார்க்கும் வகையில் திருச்சியில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 117 ஆண்கள் – 117 பெண்கள் என மொத்தம் 234 வேட்பாளரையும் ஒரே மேடையில் பெருந்திரளாக திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதேபோன்று, பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கின்ற 14 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் என 28 வேட்பாளரையும் ஒரே மேடையில் வருகின்ற 07-03-2026 மாசி 23) அன்று மாலை 04 மணி அளவில் பாண்டிச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் திடலில் (முருகா திரையரங்கம் அருகில்) நடைபெறவிருக்கும் பாண்டிச்சேரி மாநில வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவிக்கவிருக்கிறார்.
தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் திருச்சி மாநாடு ஒரு மாபெரும் எழுச்சியாக அமைந்ததற்கு தாய்த்தமிழ் உறவுகள் குடும்பம், குடும்பமாகத் தன்னெழுச்சியாகத் திரண்டதே முழுமுதற் காரணமாகும். தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் எப்படி அலை அலையாகத் திரண்டு வந்தீர்களோ அதேபோல, பாண்டிச்சேரி வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்திற்கும் பாண்டிச்சேரி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இருந்து குறிப்பாக பாண்டிச்சேரி அருகில் உள்ள மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நாம் தமிழர் உறவுகளும், மாற்றத்தை விரும்பும் மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பேரழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோல, பாண்டிச்சேரி வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்குத் தேவையான பொருளாதார நெருக்கடியை எப்போதும் போல உறவுகள் திரள்நிதித் திரட்டலில் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கோருகிறோம்.
https://donate.naamtamilar.org/candidate_announcement_pondicherry_2026
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி*தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த ஐயா வைகுண்டரின் சமத்துவ வழிப்பற்றி வணங்குவோம்!*
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை