தலைமை அறிவிப்பு – தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

5

க.எண்: 2025121038

நாள்: 29.12.2025

அறிவிப்பு:

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் Special Intensive Revision (SIR) பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 66 இலட்சம் பேர் முகவரி இடம் மாறி சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு சனவரி 18-ந்தேதி வரை ஒரு மாத காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய வருகிற சனவரி 3,4 (சனி, ஞாயிறு ) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

எனவே, நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் வாக்கக நிலை முகவர்கள் (BLA1) ஆகியோர் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்ககங்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக பெயர் இடம்பெறாமல் போனவர்களுக்கு இந்த சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேவையான வழிகாட்டு உதவிகளைச் செய்துகொடுத்து, நம் உறவுகளின் வாக்குரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும், தங்கள் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்ககங்களுக்கும் வாக்கக நிலை முகவர்கள் (BLA2) நியமிக்கவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தியுள்ளார்.

BLA2 பட்டியல் தொடர்பாக தலைமை அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் உரிய விவரங்களைத் தெரிவித்து, இப்பணியை சிறப்புற செய்து முடிக்க துணைநிற்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை