தலைமை அறிவிப்பு – பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் நடத்தும் கோரிக்கை மாநாடு சிறப்புரை: செந்தமிழன் சீமான்

6

க.எண்: 2025121017
நாள்: 12.12.2025

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் நடத்தும் கோரிக்கை மாநாடு வருகின்ற கார்த்திகை 28ஆம் நாள் (14-12-2025) பிற்பகல் 02 மணியளவில் கடலூர் மாவட்டம்,
விருத்தாசலம், பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஏ.ஆர்.எஸ். மகாலில் (ARS Mahal) நடைபெறவிருக்கிறது. இதில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் நடத்தும்
கோரிக்கை மாநாடு
சிறப்புரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: கார்த்திகை 28 | 14-12-2025 பிற்பகல் 02 மணியளவில்
இடம்: ஏ.ஆர்.எஸ். மகால் (ARS Mahal) பொன்னேரி நெடுஞ்சாலை, விருத்தாசலம் கடலூர் மாவட்டம்
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப்
பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாக
உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்! மகளிர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்