தலைமை அறிவிப்பு – சிறுபான்மையினர் மக்கள் நலக் கட்சி நடத்தும் உரையாடி உறவை வளர்ப்போம்! சீமான் கருத்துரை

6

க.எண்: 2025100902

நாள்: 01.10.2025

அறிவிப்பு:

தமிழ்த்தேசிய கிறித்தவர் இயக்கம் மற்றும்
சிறுபான்மையினர் மக்கள் நலக் கட்சி நடத்தும்உரையாடி உறவை வளர்ப்போம்!
கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: புரட்டாசி 17 | 03-10-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01 மணிவரை

இடம்: எஸ்.ஆர்.எம். உணவக விடுதி அரங்கம்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் எதிரில்

 

தமிழ்த்தேசிய கிறித்தவர் இயக்கம் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் நலக் கட்சி சார்பாக புரட்டாசி 17ஆம் நாள் 03-10-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01 மணிவரை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் எதிரில், பனிமய அன்னை பேராலயம் அருகில் எஸ்.ஆர்.எம். உணவக விடுதி (SRM Hotel) அரங்கில்உரையாடி உறவை வளர்ப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உறவுகளின் அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரையாற்றவிருக்கிறார்.

இம்மாபெரும் கருத்தரங்கத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பன்னாட்டு தமிழ் கிருத்துவப் பேராயம் மற்றும் சமூகநீதிப் பேரவை நடத்தும் உரையாடல் அமர்வு சீமான் கருத்துரை