க.எண்: 2024070202
நாள்: 18.07.2024
அறிவிப்பு:
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும்
மின் கட்டண உயர்வைக் கண்டித்து
மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
(சூலை 21, ஞாயிற்றுக்கிழமை)
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள், சாதிய மோதல்கள், வன்முறைத் தாக்குதல்கள், ரெளடிகளின் அட்டூழியம், கூலிப்படை கலாச்சாரம், கருத்துரிமைக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் ஆகியவற்றால் முற்றுமுழுதாகச் சீரழிந்து போயுள்ள சட்டம்-ஒழுங்கைக் காக்கத் தவறியதைக் கண்டித்தும், திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி, அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 21-07-2024 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்டத் தலைநகரங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி