தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் – சீமான் வாழ்த்து!

24

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள், சாதிய மோதல்கள், வன்முறைத் தாக்குதல்கள், கூலிப்படை கலாச்சாரம், கருத்துரிமைக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் ஆகியவற்றால் முற்றுமுழுதாகச் சீரழிந்து போயுள்ள சட்டம்-ஒழுங்கைக் காக்க தவறியதைக் கண்டித்தும், திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி, அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக 21-07-2024 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த என் அன்பிற்குரிய தம்பி-தங்கைகளுக்கும், பெருமதிப்பிற்குரிய பெற்றோர்களுக்கும், அன்பு உறவுகளுக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்!

மக்களுக்காக, மக்களிடமிருந்து வந்த நாம் மக்களுக்காக நிற்க வேண்டும், மக்களுடன் நிற்க வேண்டும் என்ற உன்னத உணர்வில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரணாகவும், மக்களின் துயர் துடைக்கும் கரமாகவும் ஒருங்கிணைந்து செயற்பட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் எனது அன்பும், பாராட்டுகளும்!

மக்கள் பணி தொடரட்டும்! வெல்லட்டும்!

முந்தைய செய்திஅறிவிப்பு: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
அடுத்த செய்தி2024ஆம் ஆண்டிற்கான பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா?! – சீமான் கண்டனம்