முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை இணையவழிக் கலந்தாய்வுக் கூட்டம்

13

க.எண்: 2026030140
நாள்: 19.03.2026

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான சட்டப்பணிகள் குறித்து,
நாளை 20.03.2026 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
சட்டமன்றத் தேர்தல் 2026க்கான சட்டப்பணிகள் குறித்த
வழக்கறிஞர் பாசறை இணையவழிக் கலந்தாய்வுக் கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
இக்கூட்டத்திற்கான இணைப்பு (Google Meet Link) தனிச்செய்தி மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் குழுவில் விரைவில் பகிரப்படும். கூடுதல் தகவல்களுக்கு, வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சி.சங்கர் (+91-9841287389) அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிமுக்கிய இக்கலந்தாய்வில் நமது கட்சியில் பயணிக்கும் வழக்கறிஞர்களும், வழக்கறிஞர் பாசறையின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சட்டமன்றத் தேர்தல்-2026 பணிகளுக்கான சட்ட ஆலோசகர்கள்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வுக் கூட்டம்