தலைமை அறிவிப்பு – சுற்றறிக்கை:மாநாட்டுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில் திரள்நிதி திரட்டலை விரைவுபடுத்த

2

க.எண்: 2026010063
நாள்: 31.01.2026

சுற்றறிக்கை:

வருகின்ற 21-02-2026 அன்று திருச்சியில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை திட்டமிட்ட முறையில் செய்துமுடிக்க பெரும் பொருளாதாரம் தேவைப்படுகிறது.
எனவே, மாநாட்டுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில் திரள்நிதி திரட்டலை விரைவுபடுத்த வேண்டும் எனவும், https://donate.naamtamilar.org மூலமாக இணையவழியில் திரள்நிதி திரட்டப்படுவதைப் போன்று, மக்களிடம் நேரடியாகச் சென்று மாற்றத்திற்கான தேவையை எடுத்துக்கூறி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, மாநாட்டுப் பணிகளுக்காக தங்களால் இயன்ற நிதியைப் பங்களிக்குமாறு நாம் தமிழர் உறவுகளிடத்திலும், தமிழ்த்தேசிய
ஆதரவாளர்களிடத்திலும், தங்கள் அன்பிற்குரிய உறவுகளிடத்திலும், நண்பர்களிடத்திலும், மாற்றத்தை விரும்பும் மக்களிடத்திலும் கோரிக்கை விடுக்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்காக, தலைமை அலுவலகத்தில் நன்கொடை பற்றுச்சீட்டு புத்தகம் அச்சிடப்பட்டு, அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்படவிருக்கிறது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டு நன்கொடை பற்றுச்சீட்டு புத்தகங்களைப் பெற்று, தொகுதி சார்பாக திரள்நிதி திரட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாகள்.
அவ்வாறு தொகுதி சார்பாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு, தொகுதியில் இருந்து மாநாட்டுக்கு வரவிரும்பும் மக்களை ஒருங்கிணைத்து வாடகை பேருந்து மூலம், பாதுகாப்பாக அழைத்து வருவதற்கும், அவர்களின் உணவு, குடிநீர் உள்ளிட்ட பயணச்செலவுகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாநாட்டுக்கு வரும் போது நன்கொடை பற்றுச்சீட்டு புத்தகத்தின் அடிக்கட்டு பகுதியைத் தலைமை அலுவலகப் பொறுப்பாளரர்களிடம் தவறாமல் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இச்செயற்திட்டத்திற்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருப்பூர் மடத்துக்குளம் மண்டலம் (மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்