‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்!

0

வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டுப் பொருளியல் போர் புரிந்த பெருந்தகை!

தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி சிறைசென்று மாடுகூட இழுக்கத் தயங்கும் செக்கினை இழுத்தச் செம்மல்!

சேர்த்து வைத்த செல்வங்களையெல்லாம் விடுதலைப்போருக்கு ஈந்து வறுமையில் வாடிய வள்ளல்!

தமிழ் இலக்கியங்களைப் பழுதற கற்றுணர்ந்த தமிழ்ப்பேரறிஞர்!

நமது தியாகமிகு பாட்டனார் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளில் பெருமிதத்துடனும் அவர் பெரும் புகழ் போற்றுவோம்!

வழிவழியே வரும் மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம்,நமது பாட்டனார் வ.உ.சி அவர்கள் காட்டிய வழியில் தாய் மண்ணிற்கும் மக்களுக்கும் உண்மையும், நேர்மையுமாகத் தொடர்ந்து அயராது பாடுபட உறுதியேற்போம்!

கப்பலோட்டிய தமிழர் நமது பாட்டனார் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம்!

https://x.com/Seeman4TN/status/1990637770537373754?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதண்ணீர் மாநாடு 2025 | சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு –  சிவகங்கை திருப்பத்தூர் மண்டலம் (திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025