தலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு

38

க.எண்: 2025090777

நாள்: 17.09.2025

அறிவிப்பு:

சமூகநீதிப் போராளி!

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின்
நினைவுநாள்
மலர்வணக்க நிகழ்வு
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: புரட்டாசி 02 | 18-09-2025 காலை 10 மணியளவில்

இடம்: அண்ணல் காந்தி மண்டபம்
சென்னை – கிண்டி

 

சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்டாசி 02 (18-09-2025) காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தாவின் பெரும்புகழைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஎரிபொருள் பற்றாக்குறையால் முடங்கியுள்ள திருத்தணி-பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனையைச் சீரமைத்து உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் நடத்தும் மலை வளமே, மண் வளம்! மலைகளின் மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான்