தலைமை அறிவிப்பு – (நாள் மாற்றம்) திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடரும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

47

க.எண்: 2025070653

நாள்: 07.07.2025

அறிவிப்பு:

(நாள் மாற்றம்)

திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும்,
தொடரும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
ஆனி 25 | 09-07-2025 மாலை 04 மணிஇடம்:
சந்தை திடல்
திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்று கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜீத்குமார் அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் திருப்புவனம் சந்தை திடல் அருகில் 08-07-2025 அன்று மாலை 04 மணிக்கு நடைபெறவிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறை அனுமதி காரணமாக நாள் மாற்றம் செய்யப்பட்டு 09-07-2025 அன்று மாலை 04 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திமொழி புரியாத வடமாநிலத்தவரை காவலரண் ஊழியராக பணிபுரிய அனுமதித்ததன் விளைவே 3 குழந்தைகள் பலியாக முதன்மைக் காரணம்! – சீமான் கண்டனம்