தலைமை அறிவிப்பு – முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்

33

க.எண்: 2025070652

நாள்: 07.07.2025

அறிவிப்பு:

முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் பாசறை
மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்

(சூலை 10, மதுரை-விராதனூர்)

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம், பாசறையின் மாநிலத் தலைவர் பூமிநாதன் தலைமையில் வருகின்ற 10-07-2025 அன்று காலை 10 மணி முதல் மதுரை, விராதனூர் ஆடு-மாடுகளின் மாநாட்டுத் திடலில் நடைபெறவிருக்கிறது.

இக்கலந்தாய்வில் முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் பாசறையைச் சேர்ந்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை! நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறை நடத்தும் ஆடு-மாடுகளின் மாநாடு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – (நாள் மாற்றம்) திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடரும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்