தலைமை அறிவிப்பு – தமிழர் இறைவன் திருமுருகப்பெருமானின் திருச்செந்தூர் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்

44

க.எண்: 2025060604

நாள்: 13.06.2025

முக்கிய அறிவிப்பு:

தமிழர் இறைவன் திருமுருகப்பெருமானின்
திருச்செந்தூர் திருக்கோயிலில்
தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி
வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும்
மாபெரும் பொதுக்கூட்டம்

சிம்மம் சத்தியபாமா அம்மையார்
தமிழ் ஆகம பாடசாலை – மேச்சேரி சேலம்
குச்சனூர் கிழார்
வடகுரு மடாதிபதி இராஜயோக சித்தர் பீடம் தேனி
இறைநெறி இமையவன்
செந்தமிழ் ஆகம அந்தணர்
சித்தர் மூங்கிலடிகளார்
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்
ஐயா கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தக்கார் ம.சோ.விக்டர்
வரலாற்றுப் பேராய்வாளர்
ஐயா பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்தெய்வத்தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

நாள்: வைகாசி 31 | 1406-2025 மாலை 04 மணி

இடம்: திருச்செந்தூர் சி.பா.ஆதித்தனார் திடல்

(ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில்)

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன், நமது முப்பாட்டன் திருமுருகப்பெருமானின் திருச்செந்தூர் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதிபெறப்பட்டதையடுத்து நாளை 14-06-2025 மாலை 04 மணியளவில் திருச்செந்தூரில் திட்டமிட்டபடி நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், தெய்வத்தமிழ்ப் பேரவை உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தூத்துக்குடி திருவைகுண்டம் மண்டலம் (திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு தாம்பரம் மண்டலம் (தாம்பரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்