சுற்றறிக்கை: நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை

167

சுற்றறிக்கை:

நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை

நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், கட்சி அலுவலகங்களிலும் கட்சியின் புலிக்கொடியை முறையாக ஏற்றிவைத்து பராமரிக்க வேண்டும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியைக் கம்பத்தில் ஏற்றும்போது கொடியிலுள்ள புலியின் பார்வை கொடிக் கம்பத்திற்கு எதிர்ப்புறமாக இருத்தல் வேண்டும். அதாவது இடமிருந்து வலமாக புலி பாய்வதைப்போல இருக்க வேண்டும். முழுமையான சிவப்பு வண்ண பின்புலத்தில் கருவளையத்திற்குள் வலப்புறமாகப் பார்த்த புலிமுகமும் வளையத்திற்கு மேற்புறமாக மஞ்சள் வண்ணத்தில் 26 பெரிய கோடுகளும், 27 சிறிய கோடுகளும் இருக்க வேண்டும். கோடுகள் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கக்கூடாது. ‘நாம் தமிழர் கட்சி’ எழுத்துகள் மஞ்சள் வண்ணத்தில் பொறிக்கப்பட்டிருக்கவேண்டும். கம்பம் முழுமைக்கும் 12 அங்குலம் சிவப்பு வண்ணமும், 4 அங்குலம் மஞ்சள் வண்ணமும், அடுத்தடுத்து வர வேண்டும்.

தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள கட்சியின் புலிக்கொடி வடிவமைப்பை (www.naamtamilar.org/category/downloads/) கட்சி இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து, தேவைக்கேற்ற அளவுகளில் புதிதாக அச்சடித்து பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தரவிறக்கம் செய்ய: https://drive.google.com/file/d/1VroaKMqxPqE8XpGEmYKTZnw4JN2g6AIK/view?usp=drive_link

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் இதனை உடனடியாக கவனத்தில் எடுத்து முழுமையாகச் செயற்படுத்துமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

 

முந்தைய செய்திதமிழ்நாடு தீயணைப்புத்துறைக்குத் தேர்வானவர்களுக்குப் பணியாணை வழங்கப்பட்டும் பயிற்சிக்கு அழைக்கப்படாதது ஏன்? – சீமான் கேள்வி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை