இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஐயா மாவை. சோ. சேனாதிராசா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனவேதனை
அடைந்தேன்.
ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒலித்த அவரது குரல் மௌனித்தது மிகப்பெரிய இழப்பாகும். இலங்கை இனவாத அரசால் 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்படுத்தப்பட்டவர்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழரசு கட்சியினருக்கும், ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா மாவை. சோ.சேனாதிராசா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
https://x.com/Seeman4TN/status/1885203086119240070
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி