கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் மகிழுந்தில் பயணித்த பெண்களை, திமுக கொடி கட்டிய மகிழுந்தில் பயணித்த சிலர் குடிபோதையில் வழிமறித்து மிரட்டி தாக்க வந்ததோடு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வீடுவரை வீடுவரை துரத்திச் சென்ற காட்சிகள் நெஞ்சைப் பதறச்செய்கின்றன.
பெண்கள் புகாரளித்தும் திமுக அரசின் காவல்துறை நான்கு நாட்களாக முறையான விசாரணை மேற்கொள்ளாததும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி சமரசம் பேசி வழக்குப் பதிவு செய்ய மறுத்ததும் வெட்கக்கேடானது; வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று வாய்க் கூசாமல் பேசுவதற்கு மனச்சான்று உறுத்தவில்லையா முதல்வர் அவர்களே? குற்றச்செயலில் ஈடுபடும் ஆளும் திமுகவைச் சேர்ந்த கொடூரர்களைக் காப்பாற்ற துணைநிற்பதுதான் திராவிட மாடலா?
திமுக ஆட்சியில் நிகழும் அத்தனை அட்டூழியங்களுக்கும் மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்!
https://x.com/Seeman4TN/status/1884900238835781789
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி