தமிழ்த்திரையுலகின் மூத்தத் திரைக்கலைஞர் பழம்பெரும் நடிகர் பெருமதிப்பிற்குரிய ஐயா டெல்லி கணேஷ் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும், ரசிகப்பெருமக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
விமானப்படையில் வேலை பார்த்துவிட்டு நடிப்பின் மீதான ஆர்வத்தால் நாடகத்தில் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், நாடகங்களில் மிகச்சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ஐயா டெல்லி கணேஷ் அவர்கள்; உயிரோட்டமிக்க நடிப்பால் தான் ஏற்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து, மக்கள் மனதில் நிறைந்தவர். அவர் நம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது பாத்திரங்கள் மூலமாக மக்கள் மனதில் எப்போதும் வாழ்ந்துகொண்டுதானிருப்பார். அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
ஐயாவுக்கு என் கண்ணீர் வணக்கம்!
https://x.com/Seeman4TN/status/1855597910747971644
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி