துயரச் பகிர்வு! – அன்புத்தம்பி ஸ்டாலின் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

11

நாம் தமிழர் கட்சி – மதுரை வடக்கு தொகுதி, பதூர் பகுதிப் பொறுப்பாளர் ஆருயிர் இளவல் ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி ஸ்டாலின் அவர்களை இளவயதிலேயே இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி ஸ்டாலின் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா; தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமுல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை; கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அடிபணியக் கூடாது! – சீமான் வலியுறுத்தல்