முக்கிய அறிவிப்பு: பேரிடர் துயர் துடைப்புப் பணிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் (சனவரி 05, எண்ணூர்)

225

க.எண்: 2024010003
நாள்: 04.01.2024

முக்கிய அறிவிப்பு:

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்பேரிடர் துயர் துடைப்புப் பணிகள் மற்றும்
சிறப்பு மருத்துவ முகாம்கள்
(சனவரி 05, எண்ணூர்)

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார் ஆலைகளில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகளாலும், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அண்மையில் ஏற்பட்ட நச்சுக்காற்று கசிவினாலும், கடல் சார் சூழலியலில் ஏற்பட்ட சீர்கேட்டால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாலும் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து கொடுந்துயரத்திற்கு உள்ளாகியுள்ள எண்ணூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், நாளை 05-01-2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்கவிருக்கிறார். முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை சார்பாக நடைபெறவிருக்கும் சிறப்பு மருத்துவ முகாம்களைத் தொடங்கிவைக்கவிருக்கிறார்.

நிகழ்ச்சி நிரல்:

காலை 10 மணி: சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கிவைத்தல்
இடம்: தாளங்குப்பம், எண்ணூர்

காலை 11 மணி: துயர் துடைப்பு உதவிகள் வழங்குதல்
இடம்: எண்ணூர் பகுதிகள்

உடன் களப்பணியாற்ற, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி