அறிவிப்பு: மே 01, உழைப்பாளர் நாள் விழா (தலைமை அலுவலகம் – சென்னை)

115

க.எண்: 2023040184

நாள்: 30.04.2023

அறிவிப்பு:

மே 01, உழைப்பாளர் நாள் விழா
(தலைமை அலுவலகம் – சென்னை)

சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதைப் போற்றும் விதமாக உலகெங்கும் உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகின்ற திருநாளான மே நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக நாளை 01-05-2023 அன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் உழைப்பாளர் நாள் விழா கொண்டாடப்படவிருக்கிறது.

தொழிற்சங்கப் பேரவையினர் முன்னெடுக்கும் இவ்விழாவில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாக உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

முந்தைய செய்திமே நாள் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு பெருநாளில் ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்போம்! – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திவிக்கிரவாண்டி தொகுதி கொடியேற்ற நிகழ்வு