அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி – சீமான் பங்கேற்பு

12

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி(DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணையை தமிழ்நாடு அரசு உடனடியாக செயற்படுத்தக்கோரி, 15-03-2023 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை பல்லவன் இல்லத்தில் தொடங்கி கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் முன்னெடுத்த இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் முழு ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.