தமிழ் நாள் பெருவிழா ௨௦௫௪ (2023) – செந்தமிழன் சீமான் பேருரை

43

தமிழ் நாள் பெருவிழா ௨௦௫௪ (2023) காணொலிகள்

தமிழ் நாள் பெருவிழா (சன. 16, சென்னை அண்ணாநகர்) அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு உணர்வுச்சூடேற்றிய முதல் ஈகி, ஐயா இல.நடராசன் அவர்களின் ஈகத்தைப் போற்றும் விதமாக, அவரது நினைவுநாளினை ‘தமிழ் நாள்’ என்று பேரறிவிப்பு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாளினை நாம் தமிழர் கட்சியும் உலகெங்கிலும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளும் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். அவ்வகையில் நடப்பு ஆண்டும், தமிழ் நாள் மற்றும் திருவள்ளுவர் நாளினையொட்டி 16-01-2023 திங்கள்கிழமையன்று மாலை 04 மணியளவில், சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளோடும், தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆளுமைகளின் கருத்துரைகளோடும் தமிழ் நாள் பெருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பல்வேறு துறைகளில் அருந்தமிழ்த் தொண்டாற்றும் தமிழறிஞர்கள் ஐந்து பேருக்குத் ‘தமிழ் மீட்சியர் விருது’ மற்றும் பொற்கிழி வழங்கி அவர்களைப் பெருமைபடுத்தியது தமிழ் மீட்சிப் பாசறை.

௧. தமிழர் வரலாற்றுக் காப்பரண் தக்கார் ம.சோ.விக்டர்
௨. தொல்லியல் அறிஞர் க.குழந்தைவேலனார்
௩. கடலியல் ஆய்வறிஞர் ஒரிசா பாலு
௪. தமிழ்த் தொன்ம ஆய்வாளர் அண்ணாமலை சுகுமாரன்
௫. தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்
ஆகியோர்க்குப் பெருமை சேர்க்கும் விதமாக செந்தமிழன் சீமான் அவர்களால் ‘தமிழ் மீட்சியர் விருது’ வழங்கப்பட்டது.

தமிழ் நாள் பெருவிழாவில் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ் வேந்தன் அவர்களின் தமிழ்நாள் சிறப்புப்பாயிர அரங்கேற்றம்!
இணைப்பு👇🏽

தமிழ் நாள் பெருவிழாவில் தொல்லியல் அறிஞர் க.குழந்தை வேலானார் ஐயா அவர்களின் சிறப்புரை!
இணைப்பு👇🏽

தமிழ் நாள் பெருவிழாவில் தக்கார்.மா.சோ.விக்டர் ஐயா அவர்களின் சிறப்புரை!
இணைப்பு👇

தமிழ் நாள் பெருவிழாவில் செந்தமிழன் சீமான் அவர்களின் அவர்களின் தமிழ் நாள் பேருரை!
இணைப்பு👇

முந்தைய செய்திகும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆதிக்குடியான கோனார் சமூகத்தைக் குறிவைத்து தென்மாவட்டங்களில் நடத்தப்படுகிற சாதிவெறியாட்டங்களுக்கும், படுகொலைகளுக்கும் கடும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் முடிவுகட்ட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்