க.எண்: 2023010012
நாள்: 04.01.2023
முக்கிய அறிவிப்பு:
செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில்
செந்தமிழன் சீமான் பங்கேற்பு
(சன. 05, சென்னை வள்ளுவர்கோட்டம்)
மருத்துவப் பணியாளர் தேர்வு (MRB) மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று 05-01-2023 காலை 09 மணிமுதல் மாலை 6 மணிவரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
செவிலியர்களின் இப்போராட்டத்தில் இன்று மாலை 03 மணியளவில்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முழு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பங்கேற்று, செவிலியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.
உடன், கட்சிப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு