அறிவிப்பு: டிச.11, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (சீர்காழி)

138

க.எண்: 2022120545

நாள்: 03.12.2022

அறிவிப்பு:
டிச.11, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (சீர்காழி)

கடந்த 122 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழக அரசு உடனே துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரியும், சீர்காழி தரங்கம்பாடி பகுதிகளை பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க கோரியும், கடும் மழையால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் துயர் துடைப்புத் தொகையாக வழங்க கோரியும், கொள்ளிடம் ஆற்றில் வடரங்கம் பலூரான் படுகையில் அரசு நிர்ணயத்தை விட பன்மடங்கு அளவு மணல் அள்ளப்படுவதைத் தடுக்கக்கோரியும், நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதித்துள்ள சீர்காழி பழைய பாளையம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக மூடக்கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 11-12-2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு
தமிழக அரசு உடனே துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரி

மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
11-12-2022 ஞாயிறு, காலை 10 மணியளவில்

கண்டனவுரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
சீர்காழி
பழைய பேருந்து நிலையம் அருகில்

இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி